/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் வயலில் புரளும் பன்றிகள் உசிலம்பட்டி விவசாயிகள் கவலை
/
நெல் வயலில் புரளும் பன்றிகள் உசிலம்பட்டி விவசாயிகள் கவலை
நெல் வயலில் புரளும் பன்றிகள் உசிலம்பட்டி விவசாயிகள் கவலை
நெல் வயலில் புரளும் பன்றிகள் உசிலம்பட்டி விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 27, 2024 04:20 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் மலையடிவார கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் தொல்லையால் பயிர்கள் சேதமடைகின்றன. வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்லம்பட்டி ஒன்றியம் குப்பணம்பட்டி, ஆரியபட்டி பகுதி கண்மாய் புதர்களில் புத்துார் மலைப்பகுதியில் இருந்து வந்த காட்டுப்பன்றிகள் முகாமிட்டுள்ளன. இரவில் கூட்டமாக கிளம்பும் பன்றிகள் நெல்வயல்கள் உள்ளிட்ட பயிர்களுக்குள் வந்து உருண்டு புரளுவதால் பயிர்கள் சேதமடைகின்றன என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமசாமி: குப்பணம்பட்டியில் திருமங்கலம் பிரதான கால்வாயின் மேற்கு பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர். என் இரண்டரை ஏக்கரில் ரூ. 50 ஆயிரம் செலவில் நெல் பயிரிட்டு இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது. சில நாட்களாக அருகில் உள்ள கண்மாய்க்குள் இருந்து வரும் பன்றிகள் வயல்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன.
வருவாய், வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம். கண்மாய்க்குள் இருக்கும் பன்றிகளை வனப்பகுதிக்குள் அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விளைச்சலில் இழப்பு ஏற்படும் என்றார்.