நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாதாந்திர உத்திராட நட்சத்திர உற்ஸவம் நடந்தது. காலை ஆவஹந்தி ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், மிருத்யுஞ்ஜய ேஹாமம் நடந்தன. மாலை கடையநல்லுார் சங்கரநாராயணன் வீணை, திருமுருகன் மிருதங்க இசை நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ராமகிருஷ்ணன், ஸ்ரீராமன், பரத்வாஜ், ராதாகிருஷ்ணன், சங்கரராமன் செய்திருந்தனர்.