sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாழ்வதற்கு தேவை பணமா, மனிதர்களா விளக்கிய வரதராஜனின் நாடகம்

/

வாழ்வதற்கு தேவை பணமா, மனிதர்களா விளக்கிய வரதராஜனின் நாடகம்

வாழ்வதற்கு தேவை பணமா, மனிதர்களா விளக்கிய வரதராஜனின் நாடகம்

வாழ்வதற்கு தேவை பணமா, மனிதர்களா விளக்கிய வரதராஜனின் நாடகம்


ADDED : ஆக 25, 2024 04:47 AM

Google News

ADDED : ஆக 25, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: இன்றைய உலகில் வாழ்வதற்கு தேவை பணமா, மனிதர்களா என்ற கேள்விக்கு 'டிவி' வரத ராஜனின் 'காசளவு நேசம்' நாடகம் விளக்கமளித்தது.

மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சத்குரு சங்கீத சமாஜம் சார்பில் நாடக விழா நடக்கிறது.

நேற்று (ஆக., 24) நடந்த நாடகத்தில், பணத்தை சேமிப்பதில் அக்கறை காட்டாத கணவர் சுகவனத்தை நினைத்து மனைவி மகாலட்சுமி புலம்புகிறார். அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று, ரூ.25 லட்சத்துடன் திரும்பும் சுகவனம், மனைவி பேச்சை கேட்காமல் மொத்த பணத்தையும் முதலீடு என்ற பெயரில் ஏமாந்து விடுகிறார்.

இதை அறிந்த மகாலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட, நிலை குலைகிறார் சுகவனம். குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரிடமும் உதவி கேட்கையில் பணம் தான் முக்கியம் என்பதை உணர்கிறார்.

நாட்டில் இருப்பது பணக்காரன், நடுத்தரம், ஏழை என்ற மூன்றே ஜாதி. இந்த பிரிவை போக்க பணம் தான் மருந்து. ஆஸ்திகன், பரம்பொருளையும், பணத்தையும் ஏற்றுக் கொள்கிறான். நாத்திகன், பணத்தை பரம்பொருளாக ஏற்றுக் கொள்கிறான். இன்றைய காலகட்டத்தில் நோய்களை குணப்படுத்த முடியும். ஆனால் அதற்கு பணமோ இன்சூரன்ஸ் எடுத்தலோ அவசியம். உத்தியோகம் புருஷ லட்சணம் மட்டுமல்ல, ஒருவனது லட்சணமே உத்தியோகம் தான் போன்ற கருத்துகளை காட்சிகள் வாயிலாக முன்னிறுத்தினர்.

நாயகன் சுகவனமாக 'டிவி' வரதராஜன், அவரது மனைவி மகாலட்சுமியாக லட்சுமி, தம்பி கோதண்டராமனாக ஸ்ரீதர், தங்கை விசாலமாக ஹேமா, தந்தையாக ஷங்கர் குமார், மருத்துவராக ராமானுஜம் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்தனர். எழுதி இயக்கியவர் வேதம் புதிது கண்ணன்.

இன்று (ஆக., 25) காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும் 'ஜுகல்பந்தி' நாடகம் மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.






      Dinamalar
      Follow us