/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்கால் கண்மாய் கரை ரோட்டில் விரைவில் வாகன போக்குவரத்து
/
தென்கால் கண்மாய் கரை ரோட்டில் விரைவில் வாகன போக்குவரத்து
தென்கால் கண்மாய் கரை ரோட்டில் விரைவில் வாகன போக்குவரத்து
தென்கால் கண்மாய் கரை ரோட்டில் விரைவில் வாகன போக்குவரத்து
ADDED : பிப் 24, 2025 04:31 AM

திருப்பரங்குன்றம் : மதுரை பசுமலை பகுதியில் ரோடு விரிவாக்க பணிகள் நிறைவடைந்ததும் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையின் புதிய ரோட்டில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டை ஒட்டியுள்ள தென்கால் கண்மாயின் கரையில் 1.20 கி.மீ., நீளத்தில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. பசுமலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். விளாச்சேரிக்கு செல்லும் வாகனங்களை புதிய ரோடு வழியாக அனுப்ப முடிவு செய்யப்பட்டு, சோதனை ஓட்டமாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
புதிய ரோடு பயன்பாட்டிற்கு வந்தபின்பு விளாச்சேரிக்கு செல்லும் வாகனங்கள் இடது புறமாகவும், மதுரைக்குச் செல்லும் வாகனங்கள் வலது புறமாகவும் திரும்பிச் செல்ல வேண்டும். விளாச்சேரியிலிருந்து வரும் வாகனங்கள் இடது புறமாக திரும்பி மதுரைக்கு செல்ல வேண்டும். அந்த இடம் முக்கோண சந்திப்பாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்தை துவங்கும் முன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும்.

