ADDED : ஆக 26, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் பஸ் ஸ்டாண்டு முன்பு தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நகர் செயலாளர் சரவணன், கிழக்கு, மேற்கு, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர்கள் விட்டிக் கண்ணன், காளீஸ்வரன், சந்தன பீர் ஒலியுல்லா மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
* வாடிப்பட்டியில் ஜெமினி பூங்கா போடிநாயக்கன்பட்டி ராமநாயக்கன்பட்டி பகுதிகளில் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கர்ணன், தங்கராஜ், ஒன்றிய நிர்வாகிகள் தெய்வேந்திரன், கோபால் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலச்சந்திரன் கட்சி கொடி ஏற்றினார். அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் பேரூர் செயலாளர் மாரியப்பன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.