ADDED : ஆக 14, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாக்ரடீஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வீரணன், கரந்தமலை பங்கேற்றனர்.
அரசாணை 33ல் திருத்தம் செய்து கருணை அடிப்படை பணிநியமனம் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற, இறந்தவர்களுக்கு சி.பி.எஸ்., இறுதி தொகை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில செயலாளர் வளர்மதி உட்பட பலர் பேசினர். பொருளாளர் மணிவாசகம் நன்றி கூறினார்.

