/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வசதிகளும், வாய்ப்புகளும் தரும் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி
/
வசதிகளும், வாய்ப்புகளும் தரும் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி
வசதிகளும், வாய்ப்புகளும் தரும் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி
வசதிகளும், வாய்ப்புகளும் தரும் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி
ADDED : மே 29, 2024 05:01 AM
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் காமராஜரால் 1965ல் துவக்கப்பட்டதுதான் நாடார் மகாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி. கல்விப் பணியில் 58ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆராய்ச்சிப் படிப்புகளுடன் தன்னாட்சியாக செயல்படும் இக்கல்லுாரி 'ஏ கிரேடு' அந்தஸ்து பெற்றது. கல்லுாரியை தலைவர் ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன், துணைத்தலைவர் டி.ஏ.பொன்னுசாமி, செயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர் நல்லதம்பி நிர்வகிக்க, முதல்வர் ராமமூர்த்தி, துணை முதல்வர் செல்வமலர், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஸ்ரீதர் திறம்பட பயிற்றுவிக்கின்றனர்.
இக்கல்லுாரியில் புதிதாக துவக்கப்பட்ட பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ் மற்றும் அனாலிடிக்ஸ், பி.காம்., புரொபஷனல் அக்கவுண்டிங் உள்ளிட்ட 27 இளநிலை, புதிதாக துவங்கிய எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸில் டேட்டா சயின்ஸ், எம்.பி.ஏ., உள்ளிட்ட 12 முதுநிலை, 4 முனைவர் ஆய்வு மையம் கொண்ட துறைகள், 6 சான்றிதழ், 4 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.
இங்கு நடப்பு கல்வியாண்டில் 570 பேர் வளாகத் தேர்வு மூலம் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலாண்மைத்துறை மாணவர்கள் அனைவருமே இவ்வாய்ப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. கணினிமயமாக்கப்பட்ட 71 ஆயிரம் நுால்களைக் கொண்ட நுாலகம், அதிநவீன ஆய்வகங்கள், 600க்கும் மேற்பட்ட கணினி வசதியுடன் ஆய்வு திட்டப்பணி (புராஜெக்ட்) கட்டமைப்பு, மகளிர் பஸ் உட்பட வசதிகள் உள்ளன.
இந்திய அரசின் ஐ.எஸ்.ஆர்.ஓ., ஸ்டார்ட் புரோகிராம் நடத்த அங்கீகாரம் பெற்றுள்ளது. உயிர்தொழில்நுட்பவியல் துறையின் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. கருத்தரங்க கூடங்கள், கண்காணிப்பு கேமராக்கள், போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கும் கே.எஸ்.பி.கணேசன் அகாடமியும் செயல்படுகிறது.