ADDED : செப் 11, 2024 12:30 AM
திருப்பரங்குன்றம்: மதுரை திருநகரில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் தொழில் பயிற்சி நிறுவனம் சார்பில் பெண்களுக்கான 26 நாட்கள் இலவச தொழில் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவங்கியது.
பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் சுசீலா குணசீலி, பொருளாளர் சாராள்ரூபி, ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். கவுன்சிலர் சுவேதா துவக்கி வைத்தார். கே.வி.ஐ.சி. உதவி இயக்குனர் அன்புச்செழியன், இ.டி.ஐ.ஐ., திட்ட அலுவலர் கார்த்தி, தமிழ்நாடு கிராம வங்கி முன்னாள் அலுவலர் முத்துகிருஷ்ணன், வழக்கறிஞர் சத்யன் சிவன் பேசினர்.
சிறுதானிய உணவு வகைகள், பாரம்பரிய உணவுகள், மசாலா பொருட்கள் தயாரித்தல், காய்கறி பழங்கள் பதப்படுத்துதல், குழம்பு வகைகள், தொக்குகள், பிரியாணி பவுடர், ஊறுகாய் வகைகள், மில்லட் சேமியா, அவல், ஜாம், ஜெல்லி, வடகம், ஹெல்த் மிக்ஸ், கீரை பதப்படுத்துதல், காய்கறிகள், பழ வத்தல் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேர விரும்புவோர் 89030 03090ல் விபரம் அறியலாம்.