ADDED : ஜூலை 23, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: நெடுங்குளத்தில் குறைந்த மின்னழுத்தத்தால் அப்பகுதியினர் மிகுந்த மன உளைச்சல் அடைகின்றனர்.
இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒருமாதத்திற்கும் மேலாக மின்னழுத்த குறைபாட்டால் வீடுகளுக்கு போதுமான மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால் வீட்டிலுள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. மின்விளக்குகள் எரியாததால் மாணவர்கள் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இரவில் மின்விசிறிகள் செயல்படாததால் பலர் கொசுக்கடியினாலும் துாக்கமின்றியும் தவிக்கின்றனர். இதனால் அப்பகுதியினர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
