ADDED : ஜூன் 17, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார்.
அவருக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். அங்கு கூடியிருந்த தொண்டர்களில் ஒருவர், தேர்தல் முடிவுக்கு பின் மதுரை வந்த பழனிசாமியை பார்த்து, 'அய்யா கவலைப்படாதீங்க 2026 நம்மதான்' என சத்தமாக கூறினார். அதைக் கேட்ட பழனிசாமி அவரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே சென்றார்.