/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்காளர் பட்டியல் பணி நாளை துவக்கம்
/
வாக்காளர் பட்டியல் பணி நாளை துவக்கம்
ADDED : ஆக 19, 2024 03:26 AM
பேரையூர் : பேரையூர் தாலுகாவில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நாளை ஆக.20 ல் துவங்குகிறது.
தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை வரும் 2025 ஜனவரியில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரையூர் தாலுகாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளது. பட்டியலில் இறந்தவர் பெயர்கள், இரண்டு பதிவு உள்ள வாக்காளர் பெயர்களில் தவறானது நீக்கப்படும்.
பெயர், விவரங்கள் தவறுகள் இருந்தால் திருத்தப்படும். ஜனவரியில் 18 வயது பூர்த்தி அடைவோர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்படுவர். கிராமப்புறங்களில் வீடு தோறும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தாசில்தார் செல்லப்பாண்டி, துணைத் தாசில்தார் வீரமுருகன் தெரிவித்தனர்.