/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்காளர் சரிபார்ப்பு அமைச்சர் வலியுறுத்தல்
/
வாக்காளர் சரிபார்ப்பு அமைச்சர் வலியுறுத்தல்
ADDED : ஆக 23, 2024 04:43 AM
மதுரை: 'மதுரை கிழக்கு, மேலுார், சோழவந்தான் சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்' என அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: அடுத்தாண்டு ஜன.,1ஐ தகுதி நாளாக கொண்டு போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 2025 ஜன.,6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இதன்படி அக்.,18 வரை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு, பட்டியலில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
அதன்பின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்.,29ல் வெளியிடப்படும். நவ.,28 வரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்யலாம். இப்பணிகளில் கட்சி நிர்வாகிகள் அந்தந்த ஓட்டுச்சாவடி முகவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.