/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளருக்கான ஓட்டுப்பதிவு வீட்டிலேயே பதிவு செய்தனர்

ADDED : ஏப் 07, 2024 04:51 AM

மதுரை : தேர்தலில் 85 வயதை தாண்டிய முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தவாறே ஓட்டளிக்கும் புதிய நடைமுறை நேற்று துவங்கியது.
மதுரையில் ஏப்.,9 வரை வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 12டி படிவம் பூர்த்தி செய்து வழங்கிய முதியோர் 1491 பேர், மாற்றுத்திறனாளிகள் 892 பேர் என, மொத்தம் 2383 பேர் வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்க உள்ளனர்.
ஓட்டளிக்க விரும்புவோர் தெரிவிக்கும் நாளில் அதிகாரிகள், அவரது வீட்டுக்குச் சென்று ஓட்டுப்பெட்டியை வைத்து, ஓட்டளிக்க மறைவிடம் ஏற்படுத்தித் தருவர்.
முதல்நாளான நேற்று பதிவு செய்த முதியோர் வீடுகளுக்கு அதிகாரிகள் குழுவினர் சென்று ஓட்டுக்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்தனர். கலெக்டர் சங்கீதா, உதவி தேர்தல் அதிகாரி ஷாலினி, டி.ஆர்.ஓ., சக்திவேல் உட்பட அதிகாரிகள் ஓட்டுப்பதிவை பார்வையிட்டனர்.
திருமங்கலம்
திருமங்கலத்தில் இப்பணிகளை விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் மனேஷ் குமார், தேர்தல் பிரிவு உதவி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் சந்திரலேகா மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.