நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : பேரையூர் - - டி கல்லுப்பட்டி ரோட்டில் கொண்டுரெட்டிபட்டி அருகே வைகை கூட்டுக் குடிநீர் குழாய்களில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது.
அதை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடைப்பு பெரிதாகி அதிக குடிநீர் வெளியேறியது. வெளியேறும் தண்ணீரில் தெரு நாய்கள் குளியல் போடுகின்றன. இதனால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. உடைந்த குழாய்களை அகற்றி புதிய குழாய்களை அமைத்து குடிநீர் வீணாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

