/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் கைது
/
ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் கைது
ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் கைது
ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் கைது
ADDED : மே 01, 2024 08:14 AM

மதுரை : மதுரையில் கால்வாயில் கட்டுமான பணிக்கு ஒப்புதல் வழங்க ரூ. ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்த சபீர் காசிம் 32, ஏற்றுமதி தொழில் செய்கிறார். தபால்தந்திநகரில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் நடுவில் நாகனாகுளம் கால்வாய் செல்கிறது. தங்களது இடத்தில் கட்டுமான பணியை தொடங்க ஒப்புதல் கேட்டு நீர்வளத்துறை பாசன உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன் 47, ஆய்வாளர் தியாகராஜனை அணுகினார். அவர்கள் ஒப்புதல் தர ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டனர். பின் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.ஒரு லட்சம் முன்பணம் கேட்டனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் சபீர் காசிம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின்படி நேற்று மாலை தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாயகிருஷ்ணன், தியாகராஜனிடம் ரூ. ஒரு லட்சம் லஞ்சத்தை சபீர் காசிம் வழங்கினார். அதை பெற்ற இருவரையும் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் பாரதி ப்ரியா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.