நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் அனாதைகள் நல அறக்கட்டளை சார்பில் முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேட்டி,சேலை, கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
தாசில்தார் பார்த்திபன் தலைமை வகித்தார். டாக்டர் சீதாலட்சுமி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் தியாகராஜன், கருப்பையா, திருவள்ளுவர் இலக்கிய மன்றத் தலைவர் தனபாலன், வழக்கறிஞர் சாந்தி முன்னிலை வகித்தனர். புலவர் குருசாமி வரவேற்றார். 650 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.