நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. தொடர்பு அலுவலர் ராஜா மேற்பார்வையில் நடந்த முகாமில் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன், உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் அலுவலக தொழில் வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்ரமணியன் பங்கேற்றனர்.
முதலைக்குளம் மாயக்காள் என்ற மாற்றுத்திறனாளி, நுாறு நாள் பணிக்குச் செல்ல சக்கர நாற்காலி கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பித்த அன்றே மனுவை பரிசீலனை செய்து சக்கர நாற்காலியை அலுவலர்கள் வழங்கினர்.