நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கிழக்கு ஒன்றியம் குலமங்கலம், களிமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவர் பேசுகையில், ''பொதுமக்களின் கோரிக்கைகள் இணையத்தில் பதிவு செய்து 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. மதுரை கிழக்கு தொகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், ரோடு, பட்டா மாறுதல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி செயல்படுத்தப்படுகிறது'' என்றார்.
களிமங்கலத்தில் ரூ.27.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். ஆர்.டி.ஓ., ஜெயந்தி, மாவட்ட ஊராட்சி தலைவி சூரியகலா, கிழக்கு ஒன்றிய தலைவர் மணிமேகலை, பி.ஆர்.ஓ., சாலிதளபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

