/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'இதென்ன விளையாட்டு': பெயருக்கு அமைக்கப்பட்ட சின்னஇலந்தைக்குளம் அரங்கு: மதுரையில் 9 தொகுதிகளில் அமையுமா மினி ஸ்டேடியம்

ADDED : மார் 13, 2025 05:08 AM

மதுரை: இரண்டாண்டுகளுக்கு முன் மதுரையில் 9 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என சட்டசபையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் சோழவந்தான் தொகுதி சின்ன இலந்தைக்குளத்தில் மட்டும் பெயருக்கு அரைகுறையாக அமைக்கப்பட்டு திறப்புவிழா முடிந்துள்ளது.
மதுரை வடக்கு தொகுதியில் ரேஸ்கோர்ஸ் மைதானம் அமைந்துள்ளதால் அது தவிர மீதமுள்ள 9 தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பெயருக்கு மைதானமா
சோழவந்தான் சின்னஇலந்தைக்குளத்தில் சமீபத்தில் மினி ஸ்டேடியம் திறக்கப்பட்டது. ஜிம் அரங்கு மட்டும் கட்டடமாக அமைந்துள்ளது. 200 மீட்டர் தடகளம், வாலிபால், டென்னிஸ் அரங்குகளை சுண்ணாம்பு, சரளை கற்களால் அமைத்துள்ளனர். கூடைபந்து அரங்கு சிமென்ட் தரைத்தளமாக இருந்தாலும் 'லெவலிங்' செய்யாமல் பெயருக்கு பூசியுள்ளதால் மேடு பள்ளமாக உள்ளது.
வீரர்கள் அரங்கில் ஓடியாடும் போது சமமற்ற தரையில் தடுமாறி விழுந்தால் எலும்புமுறிவு ஏற்பட வேண்டியது தான். அனைத்தும் திறந்தவெளி அரங்குகள் என்பதால் மழை பெய்தால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடும், விளையாட முடியாது. அதேபோல தடகள டிராக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தமுடியாத அளவு சரளைக்கற்களாக உள்ளன. பெயருக்கு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளதே தவிர வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியாது. தடகள, பிற விளையாட்டு அரங்குகளை செம்மண், மணலால் சமப்படுத்தி கடினதரை அமைத்தால் மட்டுமே வீரர்கள் விளையாட முடியும்.
உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலத்தில் இடம் தேர்வாகி விட்டது.
திருப்பரங்குன்றத்தில் இடம் தேர்வில் இழுபறி நீடிக்கிறது. மதுரை கிழக்கு, மேற்கு, மத்தி, தெற்கு தொகுதிகளில் இதுவரை மைதானம் அமைக்க இடம் தேர்வாகவும் இல்லை. இவை அனைத்துமே தி.மு.க., எம்.எல்.ஏ., தொகுதிகள். தேர்தல் வருவதற்குள் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் மனது வைத்தால் தான் மினி ஸ்டேடியங்கள் அமையும்.