ADDED : செப் 09, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளையன் ஆட்சியை எதிர்த்து மக்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்க தேச பக்தரான பால கங்காதர திலகர் கொண்டாடிய விழா விநாயகர் சதுர்த்தி. இவ்வருடம் இவ்விழாவை செப்.7ல் நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் கொண்டாடினர்.
இதற்காக பூஜித்த களிமண் விநாயகர் சிலையை மூன்றாம் நாளான இன்று (செப்.9) நீர் நிலைகளில் கரைப்பது நல்லது. ராகு காலம் (காலை 7:30--9:00 மணி), எமகண்டம் (காலை 10:30- 12:00 மணி) இல்லாத மற்ற நேரத்தில் மாலை 6:00 மணிக்குள் கரைக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிலையை நீரில் கரைத்து பூச்செடி, மரத்தடி போன்ற கால்கள் படாத இடங்களில் ஊற்றுங்கள்.