/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் செய்யாதோருக்கும் பதிவுச்சான்று வழங்கியது ஏன் கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் கேள்வி

ADDED : மே 29, 2024 04:44 AM
மதுரை : 'கேபிள் டிவி தொழிலில் இல்லாதோருக்கும் பதிவுச் சான்று வழங்கியது குறித்து தபால் துறை விசாரிக்க வேண்டும்' என கலெக்டர் சங்கீதாவிடம் கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் மனு கொடுத்தனர்.
அனைத்து கேபிள் 'டிவி' சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ரமேஷ், பாண்டி, குமரேசன், வெங்காராம் வழங்கிய மனு:
30 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக வழிகாட்டிப்படி தபால் துறையில் பதிவு செய்து, முறையாக கேபிள் டிவி தொழில் செய்கிறோம்.
தற்போது இத்தொழிலில் இல்லாத நபர்களுக்கு தபால் துறையில் ரூ.500க்கு பதிவு செய்வதுடன், நன்கு விசாரிக்காமல் சான்றிதழ் வழங்குவதும் நடக்கிறது. அந்நபர்கள் முறையாக தொழில் செய்யும் எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இடையூறு செய்கின்றனர். இவ்வாறு பதிவுச் சான்று பெற்ற சிலர் 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளனர்.
இவ்வாறு தொழிலில் இல்லாதவர்களுக்கு பதிவுச்சான்று வழங்கியது எப்படி என்பதை விசாரித்து ரத்து செய்ய வேண்டும். கேபிள் வயரை துண்டிக்கின்றனர். அவர்களிடம் தபால் துறை நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.