/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருநகர் 2வது பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா
/
திருநகர் 2வது பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா
திருநகர் 2வது பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா
திருநகர் 2வது பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா
ADDED : ஜூன் 11, 2024 06:42 AM
திருநகர் : மதுரை திருநகர் 2வது பஸ் ஸ்டாப் மெயின் ரோட்டில் ரவுண்டானா அமைக்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பழங்காநத்தம் முதல் திருநகர் 3வது பஸ் ஸ்டாப் வரை ரோடு விரிவாக்க பணி நடக்கிறது. ஹார்விபட்டி பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்க 'மார்க்' செய்யப்பட்டுள்ளது.
ஆனால் திருநகர் 2வது பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
திருநகர் 2வது பஸ் ஸ்டாப்பில் ஒன்றிய அலுவலகம், வேளாண், தோட்டக் கலைத்துறை அலுவலகங்கள், வங்கிகள், எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல், அலுவலகங்களுக்கு வரும் மக்களும், திருநகர், ஜோசப்நகர், விளாச்சேரி பகுதி மக்களும் 2வது பஸ் ஸ்டாப் நிறுத்தத்தில்தான் ரோட்டை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
அப்பகுதி எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்ததாக உள்ளது. அங்கு ரோட்டை கடக்க மக்கள் சிரமம் அடைகின்றனர். தற்போது ரோடு விரிவாக்கத்தால் ரோட்டை கடக்க மக்கள் கூடுதல் சிரமம் அடைகின்றனர். அதனால் 2வது பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.