/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு நடக்குமா: ஆசிரியர்கள் அதிருப்தி
/
ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு நடக்குமா: ஆசிரியர்கள் அதிருப்தி
ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு நடக்குமா: ஆசிரியர்கள் அதிருப்தி
ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு நடக்குமா: ஆசிரியர்கள் அதிருப்தி
ADDED : ஆக 19, 2024 03:28 AM
மதுரை : தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் நிர்வாக காரணம் எனக் கூறி ஒத்திவைக்கப்பட்ட மாறுதல் கலந்தாய்வு நடக்காததால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இக்கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலையில் நடந்தது. நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.
அதேநேரம் ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல், தொடக்க, நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மறுகலந்தாய்வு ஆக., 1, 2, 5ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் நிர்வாக காரணம் எனக் கூறி இதுவரை நடத்தவில்லை. இதனால் மாவட்டம் வாரியாக நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ''நிர்வாக காரணம் எனக் கூறி நிறுத்தி வைத்த கலந்தாய்வை நடத்தாமல் இருப்பது கல்வி அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கையை காட்டுகிறது.
இதனால் இரண்டு ஆண்டுகளாக மாறுதல் கிடைக்காமல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடத்துவதற்கு ஏற்ப காலியிட விவரம் வெளியிட்டுள்ள நிலையில் நிறுத்தி வைத்த மறுகலந்தாய்வை விரைவில் நடத்த தொடக்க கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

