/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலத்தில் பாழடைந்த போலீஸ் குடியிருப்புகள் பத்தாண்டு அவலத்திற்கு தீர்வு வருமா

ADDED : ஏப் 04, 2024 05:59 AM

திருமங்கலம், : திருமங்கலம் போலீஸ் குடியிருப்புகள் 15 ஆண்டுகளாக பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே டவுன், தாலுகா, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர்.
இவர்களுக்கான குடியிருப்புகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்புறம் 4 ஏக்கரில் உள்ளது. இங்கு பத்தாண்டுகளுக்கு முன்பு கட்டிய குடியிருப்புகள் தவிர, பழைய குடியிருப்புகள் அனைத்தும் இடிந்த நிலையில் கிடக்கின்றன.
தண்ணீர் வசதி இல்லாததால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு யாரும் குடியிருக்கவில்லை. ஒன்றிரண்டு வீடுகளில் இருப்போரும் தண்ணீருக்காக அல்லாடுகின்றனர். இந்த வளாகத்தில் 1.5 ஏக்கருக்கு மேல் பறிமுதல் வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றினுாடே விஷ ஜந்துகள் உலா வருகின்றன.
இந்த குடியிருப்புகளை பராமரிக்கவோ, புதிதாக கட்டவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு பணியாற்றும் போலீசார் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். மிகப்பெரிய வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த இட வசதியில்லை.
போக்குவரத்து மிகுந்த மதுரை ரோட்டில், ஸ்டேஷனுக்கு எதிர்புறம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் செயல்படுவதால் இந்தப் பகுதியில் எந்நேரமும் நெரிசல் நிலவுகிறது.
மாவட்ட போலீஸ் நிர்வாகம், இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிதாக கட்டி போலீசார் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.