ADDED : ஆக 15, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரைக் கோட்ட எல்.ஐ.சி., உழைக்கும் மகளிர் துணைக்குழுவின் 40வது மாநாடு மதுரையில் நடந்தது. அமைப்பாளர் சித்ரா தலைமை வகித்தார். வழக்கறிஞர் தாரா, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலர் கிரிஜா, சி.ஐ.டி.யு., மாநில பொறுப்பாளர் லுார்து ரூபி பேசினர்.
பாலின பாரபட்சமின்றி சமவேலைக்கு சம ஊதியத்தை மகளிருக்கு உறுதிப்படுத்த வேண்டும். ஜாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். எல்.ஐ.சி., மகளிருக்கு ‘மெனாபாஸ்’ விடுப்பு வழங்க வேண்டும். சமூகநீதி, பெண் கல்வியை புறந்தள்ளும் புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணை அமைப்பாளர் பிரேமலதா நன்றி கூறினார்.
