ADDED : ஆக 15, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக.16- –
மதுரையில் நேதாஜி தேசிய இயக்கம், தங்கமயில் ஜூவல்லரி சார்பில் சுதந்திர தின ரத்ததான முகாம் நடந்தது.
தங்கமயில் ஜுவல்லரி இணை இயக்குநர் ரமேஷ், நஜ்மா, உச்சி மகாலிங்கம், டாக்டர் சவுந்தரபாண்டியன், மீனாட்சி மிஷன் டாக்டர் கணேஷ் ராஜகோபால், முதுநிலை மேலாளர் பாண்டியராஜன், ரத்த வங்கி முதுநிலை மேலாளர் ரவி, குஜராத்தி சமாஜ் தலைவர் எக்னேஷ் பட், துணைத் தலைவர் கிஷோர் முகாமை தொடங்கி வைத்தனர். தியாகராஜர் கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் சேவை செய்தனர். 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்தவர்களுக்கும், ரத்ததான அமைப்பினருக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நேதாஜி சுவாமிநாதன் செய்திருந்தார். வசந்த் நன்றி கூறினார்.
