/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண்கள் சுதந்திரம் விழிப்புணர்வு பிரசாரம்
/
பெண்கள் சுதந்திரம் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : பிப் 15, 2025 05:20 AM
மதுரை: மதுரையில் ஏக்தா அமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,பள்ளி, கல்லுாரி, மக்கள் இயக்கங்கள் சார்பில் 'பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகை இணையவழி வன்முறைக்கு எதிராகவும், பெண்கள் சுதந்திரத்தை வலியுறுத்தியும்' காந்தி மியூசியத்தில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
இந்தாண்டு 'வன்முறைக்கு எதிரான நுாறு கோடி மக்களின் உலகளாவிய பிரசாரம்' என்ற பெயரில் ஊர்வலம் துவங்கியது. இதையொட்டி பலுான் பறக்கவிடப்பட்டது. ஏக்தா அமைப்பு இயக்குநர் பிம்லா தலைமை வகித்தார்.மதுரை காமராஜ் பல்கலை தொடர்பியல் துறை தலைவர் நாகரத்தினம் வரவேற்றார். கூடு அமைப்பு நிர்வாகி ராணி, ஏக்தா ஆலோசகர் பவளம், சோகோ டிரஸ்ட் செல்வகோமதி, தியாகம் அமைப்பின் அமுதசாந்தி, காந்தி கிராம இன்ஸ்டிடியூட் பேராசிரியர்கள் மீனாட்சி, புஷ்பா பேசினர். பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

