ADDED : ஜூலை 16, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : தமிழ்நாடு மின்வாரியத்தில் 5 ஆண்டுகளாக உதவிப்பொறியாளர் நேரடி நியமனம் இல்லாததால், மின் துறையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உரிய ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் கழகம் சார்பில்,செயற்பொறியாளர் வெங்கடேஷ்வரன், உதவிப் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், தமிழரசி, சிவசீலா கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

