ADDED : ஆக 28, 2024 05:00 AM
மதுரை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒத்தக்கடை குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகள, குழு விளையாட்டுப் போட்டிகளை ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நடத்தியது.
ஆடவர் போட்டி முடிவுகள்
பாட்மின்டன் 14 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவில் தாகூர் வித்யாலயா முதலிடம், 17 வயது ஒற்றையர் பிரிவில் தாகூர் வித்யாலயா, இரட்டையர் பிரிவில் சாய்ராம் மெட்ரிக் பள்ளி முதலிடம், 19 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவில் சாய்ராம் மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்றன.பால் பாட்மின்டன் 14 வயது, 17 வயது பிரிவில் பி.என். மெட்ரிக் பள்ளி, 19 வயது பிரிவில் தாகூர் வித்யாலயா பள்ளி முதலிடம் பெற்றன. கூடைபந்து போட்டியின் 14, 17, 19 வயது பிரிவுகளில் நேரு வித்யாலயா பள்ளி முதலிடம் பெற்றது. கேரம் 14 வயது ஒற்றையர் பிரிவில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி, 17 வயது பிரிவில் கேட்டி வில்காக்ஸ் பள்ளி, 19 வயது பிரிவில் சாய்ராம் பள்ளி, 14 வயது இரட்டையர் பிரிவில் தாகூர் வித்யாலயா வித்யாலயா, 17 வயதில் கேட்டி வில்காக்ஸ், 19 வயதில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி முதலிடம் பெற்றன. கால்பந்து 14 வயதில் ஒத்தக்கடை அரசுப் பள்ளி, 17, 19 வயதில் சாய்ராம் பள்ளி, ஹேண்ட்பால், ஹாக்கி 14 வயதில் மாங்குளம் அரசுப் பள்ளி, கபடி 14 வயதில் ஒத்தக்கடை அரசுப் பள்ளி, 17 வயதில் நேரு வித்யாலயா, 19 வயதில் பி.என். மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்றன.
கோ கோ 14, 17 வயதில் மாயாண்டிபட்டி அரசுப் பள்ளி, 19 வயதில் ஒத்தக்கடை அரசுப் பள்ளி, டேபிள் டென்னிஸ் 14 வயது ஒற்றையர், இரட்டையரில் தாகூர் வித்யாலயா, 17 வயதில் சாய்ராம் மெட்ரிக், 19 வயது ஒற்றையர் பிரிவில் தாகூர் வித்யாலயா, இரட்டையரில் கேட்டி வில்காக்ஸ் முதலிடம். டெனிக்காய்ட் 14 வயது ஒற்றையர், இரட்டையரில் கேட்டி வில்காக்ஸ் முதலிடம். 17 வயது ஒற்றையரில் சாய்ராம், 19 வயதில் ஒத்தக்கடை அரசுப் பள்ளி, 17 வயது இரட்டையரில் மாயாண்டிபட்டி அரசுப் பள்ளி, 19 வயதில் கேட்டி வில்காக்ஸ் பள்ளி முதலிடம். எறிபந்து 14, 17 வயதில் சாய்ராம் பள்ளி, 19 வயதில் கேட்டி வில்காக்ஸ், வாலிபால் 14, 17, 19 வயதில் சாய்ராம் பள்ளி முதலிடம் பெற்றன.
மகளிர் போட்டி முடிவுகள்
பாட்மின்டன் 14 வயது, 19 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவில் பொன்முடியார் மாநகராட்சி பள்ளி முதலிடம், 17 வயது ஒற்றையரில் ஓ.சி.பி.எம்., பள்ளி, இரட்டையரில் சாய்ராம் பள்ளி முதலிடம் பெற்றன. பால் பாட்மின்டன், கூடைபந்து, வாலிபால் போட்டி 14, 17, 19 வயது பிரிவுகளில் ஓ.சி.பி.எம். பள்ளி முதலிடம். கேரம் 14 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவில் பி.என். மெட்ரிக் பள்ளி, 19 வயது பிரிவில் பொன்முடியார் மாநகராட்சி பள்ளி, 17 வயது ஒற்றையரில் பொன்முடியார், இரட்டையரில் பி.என். பள்ளி முதலிடம் பெற்றன. கால்பந்து 14, 19 வயதில் பொன்முடியார், 17 வயதில் ஒத்தகடை அரசுப் பள்ளி, ஹேண்ட் பால் 14 வயதில் மாயாண்டிபட்டி அரசுப் பள்ளி, 17 வயதில் ஒத்தக்கடை அரசுப் பள்ளி, 19 வயதில் பொன்முடியார் பள்ளி, கபடி 14 வயதில் பொய்கைகரைப்பட்டி அரசுப் பள்ளி, 17, 19 வயதில் பொன்முடியார் பள்ளி, கோ கோ 14 வயதில் ஒத்தக்கடை அரசுப் பள்ளி, 17, 19 வயதில் ஓ.சி.பி.எம். முதலிடம் பெற்றன. டெனிகாய்ட் 14, 17 வயது ஒற்றையரில் சாய்ராம், 19 வயதில் பொன்முடியார், 14 வயது இரட்டையரில் பொய்கைகரைப்பட்டி அரசுப் பள்ளி, 17 வயதில் சாய்ராம், 19 வயதில் பொன்முடியார் பள்ளி முதலிடம் பெற்றன. எறிபந்து 14, 17, 19 வயதில் சாய்ராம் பள்ளி, வாலிபால் 14, 17, 19 வயதில் ஓ.சி.பி.எம். பள்ளிகள் முதலிடம் பெற்றன. ஆடவர் பிரிவில் 154 புள்ளிகளுடன் நேரு வித்யாலயா, மகளிர் பிரிவில் 240 புள்ளிகளுடன் ஓ.சி.பி.எம். பள்ளிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன.