/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இலவச உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்
/
இலவச உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 07, 2025 07:14 AM
மதுரை : தாட்கோ அமைப்பு சார்பில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினர் பி.எஸ்சி., (ஆஸ்பிடாலிட்டி, ஓட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்) மூன்றாண்டு பட்டப்படிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு முடித்தோருக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல், கைவினைஞர் படிப்புகளில் சேரலாம். 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மேலும் தாட்கோ பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியாக மருத்துவம், தொழில் சார்ந்த ஆங்கில தேர்வு பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங், பொதுசெவிலியர் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். செலவை தாட்கோ நிறுவனம் ஏற்கும். இதில் சேர தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.