/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உற்பத்தி, சேவைத் தொழில்களை முடக்கும் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம் * வணிகத்திற்கு மட்டும் என சுருங்கியது இலக்கு
/
உற்பத்தி, சேவைத் தொழில்களை முடக்கும் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம் * வணிகத்திற்கு மட்டும் என சுருங்கியது இலக்கு
உற்பத்தி, சேவைத் தொழில்களை முடக்கும் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம் * வணிகத்திற்கு மட்டும் என சுருங்கியது இலக்கு
உற்பத்தி, சேவைத் தொழில்களை முடக்கும் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம் * வணிகத்திற்கு மட்டும் என சுருங்கியது இலக்கு
ADDED : செப் 12, 2024 07:32 PM
மதுரை:தமிழக அரசின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (யு.ஒய்.இ.ஜி.பி.,) கீழ் வணிகம் செய்பவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுவதால் உற்பத்தி, சேவைத்தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த போது உற்பத்தி, சேவைத்தொழில்கள், வியாபாரத்திற்கு மானியம் வழங்கப்பட்டது. ரூ. 5 லட்சம் வரையான கடன் திட்ட மதிப்பீடு என்பது கடந்தாண்டு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் 8 ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொதுப்பிரிவு ஆண்கள் 45 வயதுக்குட்பட்டவர்கள் கடன் பெறலாம். பெண்கள், மற்ற பிரிவினர், திருநங்கைகள் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம் என விதிகள் தளர்த்தப்பட்டது.
கடனுக்கான திட்டமதிப்பீட்டில் பொதுப்பிரிவு ஆண்களுக்கு 10 சதவீதம், மற்றவர்களுக்கு 5 சதவீத சுயமுதலீடு இருந்தால் போதும். கடனுக்கான மானியமாக 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் இரண்டாண்டுகளாக உற்பத்தி, சேவைத்தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனும், மானியமும் வழங்குவது நிறுத்தப்பட்டதால் தொழில் செய்ய விரும்புவோர் கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
மாநில அரசின் அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரும், நீட்ஸ் திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில்முனைவோர் மட்டுமே பயன்பெற முடியும். மாநில அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் குறிப்பிட்ட வரம்பு உள்ளதால் புதிதாக சிறிய அளவில் உற்பத்தித்தொழில், சேவைத்தொழில் செய்ய விரும்புவோர் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை பயன்படுத்த முடியவில்லை. வணிகம், வியாபாரத்திற்காக மட்டும் செயல்படுத்தப்படுவதால் எல்லோருமே பிரதமரின் பி.எம்.இ.ஜி.பி., திட்டத்திற்கு விண்ணப்பிக்கின்றனர். ஆண்டுக்கு இவ்வளவு பேருக்குத்தான் மானியம் என்று இலக்கு உள்ளதால் கடன்பெற ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
முன்பு இருந்ததை போலவே யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவைத்தொழில்களுக்கும் கடன் மற்றும் மானியம் வழங்குவதை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.