மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 10 நாள் விடுப்பு: ஆசிரியர்கள்
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 10 நாள் விடுப்பு: ஆசிரியர்கள்
ADDED : ஜூலை 14, 2026 05:04 AM

மதுரை: 'மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கேரளம் அரசு 10 நாட்கள் விடுப்பு வழங்கி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது: 2027 தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி அனைத்து மாநிலங்களிலும் நடக்கவுள்ளது.
அதற்கான களப்பணியாளர்களுக்கு அந்தந்த மாநிலங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கேரளத்தில் இப்பணியில் ஈடுபட்டும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 10 முழு வேலை நாட்கள் அல்லது 20 அரை வேலை நாட்கள் (முற்பகல் அல்லது பிற்பகல்) விடுப்பு அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்திலும் ஆசிரியர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே கேரளம் போல் தமிழக அரசும் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
