ADDED : ஜூலை 14, 2026 05:02 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தனக்கன்குளம் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் என்.எம்.எஸ்., சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடந்தது.
தாளாளர் வடிவேலு தலைமை வகித்தார். தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் துவங்கி வைத்தார். காமராஜரின் கல்விப் பணி, எளிமை, நேர்மை, மக்கள் நலத்தொண்டு உள்ளிட்ட பண்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் நடந்த இப்போட்டியில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற மாணவர்கள், இன்று (ஜூலை 14) விருதுநகரில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்பர்.
முதல்வர் ராமலட்சுமி, போட்டி ஒருங்கிணைப்பாளர் அனிதா, மாவட்ட செயலாளர் வெற்றிவேல் பங்கேற்றனர்.
