/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருநகரில் ஆபத்தான பள்ளத்தால் தினமும் 10 பேருக்கு காயம் 'பரிசு'
/
திருநகரில் ஆபத்தான பள்ளத்தால் தினமும் 10 பேருக்கு காயம் 'பரிசு'
திருநகரில் ஆபத்தான பள்ளத்தால் தினமும் 10 பேருக்கு காயம் 'பரிசு'
திருநகரில் ஆபத்தான பள்ளத்தால் தினமும் 10 பேருக்கு காயம் 'பரிசு'
ADDED : நவ 11, 2024 04:31 AM

திருநகர்: திருநகர் இரண்டாவது பஸ் ஸ்டாப்பில் சாலை சீரமைப்பு பணி முழுமையாக மேற்கொள்ளப்படாததால் ரோட்டின் நடுவில் உள்ள பள்ளத்தில் டூவீலரில்செல்வோர் தினமும் குறைந்தது பத்து பேராவது காயமடைகின்றனர்.
பழங்காநத்தம்-திருநகர் இடையே நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. திருநகர் 2வதுபஸ் நிறுத்தம் பகுதியில் ஒன்றிய நிர்வாகத்தின்வணிக வளாகம் ரோடு விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்தது. அதனை அகற்றுவதில் பல மாதங்கள் தாமதமானது.
அதுவரை அப்பகுதியில் 500 மீட்டருக்கு தார் சாலை அமைக்கவில்லை. அதனால் மேடு பள்ளங்களாக இருந்தது. வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு அந்த வணிக வளாகத்தை அகற்றி, தார் சாலை அமைத்தனர். அந்தச் சாலையின் நடுவே மீடியன் அமைக்கப்பட்டுஉள்ளது.
இரண்டாவது பஸ் நிறுத்தம் பகுதியில் இரண்டு ரோட்டுக்கும் நடுவில் மீடியன் உள்ள பகுதியில் 200 மீட்டர் மேடு, பள்ளமாக உள்ளது.
இதனால் ரோட்டின் ஒரு புறத்திலிருந்து ஒன்றிய அலுவலகம் நோக்கி டூவீலர்கள், சைக்கிளில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். ஆபத்தான அந்த பள்ளத்தை உடனே சீரமைக்க நடவடிக்கை தேவை.