sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 குன்றத்தில் தீப அஞ்சலி செலுத்திய 10 பேர் கைது

/

 குன்றத்தில் தீப அஞ்சலி செலுத்திய 10 பேர் கைது

 குன்றத்தில் தீப அஞ்சலி செலுத்திய 10 பேர் கைது

 குன்றத்தில் தீப அஞ்சலி செலுத்திய 10 பேர் கைது


ADDED : டிச 21, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி மதுரை நரிமேடு பூர்ண சந்திரன் டிச. 18ல் மதுரை போலீஸ் அவுட் போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து இறந்தார். அவருக்கு திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயில் முன் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், ஹிந்து ராஷ்டிர சபா மாநில தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட தலைவர் முத்து கவுதம மூர்த்தி, ஹிந்து ஆலய பாதுகாப்பு மாநில தலைவர் சுடலைமணி, வராகி சுவாமிகள், பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கமுத்து கவுதம மூர்த்தி, பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம் கணேசன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோலை கண்ணன் கூறியதாவது: தீப துாணில் தீபம் ஏற்றாததை கண்டித்து பூர்ணசந்திரன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவருக்கு தீப அஞ்சலி செலுத்த வந்த எங்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் மட்டுமே இது நடக்கிறது.

தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவை தி.மு.க., அரசு சதி செய்து முடக்கிவிட்டது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டார்கள். ஆனால் ஆர்.டி.ஓ., சொல்வதை மதித்து இஸ்லாமியர் கொடி ஏற்றுவதை அனுமதிப்பார்கள். ஹிந்துக்கள் எழுச்சி பெற வேண்டும் என்றார்.

பா.ஜ.,வினர் கைது உசிலம்பட்டி: பூர்ணச்சந்திரன் படத்திற்கு உசிலம்பட்டியில் வி.எச்.பி., பஜ்ரங்தள், பா.ஜ., வினர் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை பண்ணைப்பட்டி விலக்கு பகுதியில் அவரது படத்திற்கு முன் அனுமதி பெறாமல் அஞ்சலி செலுத்திய பா.ஜ., வினர் தெற்கு மண்டல அமைப்பாளர் முருகன், மேற்கு மாவட்ட செயலாளர் சிவமுருகன், ஒன்றிய தலைவர் குருசாமி, கூட்டுறவு பிரிவு சொக்கர், அமைப்பு சாரா அணி மோகன் உட்பட 10 பேரையும், மாவட்டச் செயலாளர் தீபன்முத்தையா, நிர்வாகிகள் சவுந்திரபாண்டி, தினகரன், கல்யாண்குமார், ஒச்சாத்தேவன், நாகராஜ் உட்பட 15 பேரையும் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

எழுமலை: பா,ஜ., சார்பில் பூர்ணச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எழுமலை ராஜகணபதி கோயிலில் நடைபெற்றது. கல்வியாளர் பிரிவு மாநிலச்செயலாளர் பொன்கருணாநிதி, மாவட்டச் செயலாளர் உதயசந்திரன், சேடபட்டி வடக்கு ஒன்றியத்தலைவர் மருதக்காளை, வக்கீல்பிரிவு மாவட்டத் துணைத்தலைவர் அருளானந்த், பொதுச்செயலாளர் இளையராஜா, ஒன்றியத்துணைத்தலைவர் லட்சுமணப்பெருமாள், ஹிந்து முன்னணி ஒன்றியத்தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us