/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலிப்பணியிடத்தை நிரப்பும் வரை காத்திருப்பு போராட்டம் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் அறிவிப்பு

ADDED : டிச 21, 2025 05:25 AM
மதுரை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8000 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் காலிப்பணியிடம் இல்லை என்று அறிவித்துள்ளார். அதை முழுமையாக நிரப்பும் வரை மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், தொகுப்பூதிய செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: டிச.18 சென்னையில் சங்கம் சார்பில் போராட்டம் நடந்த போது பாதிக்கும் மேற்பட்ட செவிலியர்களை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டும், மீதி உள்ளோரை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்து குடிநீர், மின்சாரம், கழிப்பறை நீர் இணைப்பை துண்டித்து போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டனர். 2021 தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் 'நான் முதல்வரானால் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வேன்' என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதை செயல்படுத்த வேண்டும். மேலும் சம வேலைக்கு சம ஊதியம் என்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீட்டை வாபஸ் வாங்க வேண்டும். இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார்.