/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'இன்ஸ்டா'வில் நண்பராக பழகி கஞ்சா விற்ற 10 பேர் கைது
/
'இன்ஸ்டா'வில் நண்பராக பழகி கஞ்சா விற்ற 10 பேர் கைது
'இன்ஸ்டா'வில் நண்பராக பழகி கஞ்சா விற்ற 10 பேர் கைது
'இன்ஸ்டா'வில் நண்பராக பழகி கஞ்சா விற்ற 10 பேர் கைது
ADDED : ஜூன் 30, 2025 04:08 AM
மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் மதுவிலக்கு எஸ்.ஐ., சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியை கண்காணித்தனர். போலீசாரை கண்டு சிலர் தப்பிக்க முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, பெத்தானியாபுரம் சிக்கந்தர் பாட்சா 29, ஆரப்பாளையம் கவுதம் 25, பழங்காநத்தம் பிரேம்குமார் 25, சங்கர் 23, முனியசாமி 37, நிக்சன் ராஜ் 26, பாஸ்கர் 29, அர்ஷித் விக்னேஷ் 27, கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவன் 33, திருவண்ணாமலை ஆனந்த் 23 என தெரிந்தது.
இவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக பழகி ஆந்திரா, ஒடிசாவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கொள்முதல் செய்துள்ளனர். மதுரையில் மாணவர்கள், தொழிலாளர்களிடம் விற்றுள்ளது தெரியவந்தது. அவர்கள் 10 பேரையும் கைது செய்து, 3.5 கிலோ, 9 அலைபேசிகள், 3 டூவீலர்கள் , கார், ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை வண்டியூர் பகுதியில் அண்ணாநகர் எஸ்.ஐ., நித்யா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். வைகை தென்கரை ரோடு டாஸ்மாக் கடைக்குப் பின் சாக்கு பையுடன் நின்ற சிலரிடம் சோதனை நடத்தியதில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள் சக்கிமங்கலம் அருண்பாண்டி 33, திருச்சி சந்தோஷ்குமார் 40 என தெரிந்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்களிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சா, ரூ. 4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.