/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
10 வார்டு குப்பை ஒரே வார்டில் குவிப்பு சுகாதாரக்கேட்டில் குடியிருப்பு பகுதிகள்
/
10 வார்டு குப்பை ஒரே வார்டில் குவிப்பு சுகாதாரக்கேட்டில் குடியிருப்பு பகுதிகள்
10 வார்டு குப்பை ஒரே வார்டில் குவிப்பு சுகாதாரக்கேட்டில் குடியிருப்பு பகுதிகள்
10 வார்டு குப்பை ஒரே வார்டில் குவிப்பு சுகாதாரக்கேட்டில் குடியிருப்பு பகுதிகள்
ADDED : மே 02, 2025 06:38 AM

மதுரை: மதுரையில் நத்தம் மெயின் ரோடு மேனேந்தல் பகுதியில் மாநகராட்சி உரம் தயாரிப்பு மையம் செயல்படாததால் அப்பகுதி வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மலைபோல் குவிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் சுகாதாரகேட்டின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.
மாநகராட்சி வார்டு எண் 8 க்கு உட்பட்ட இப்பகுதியில் மருத்துவமனை, கல்லுாரி, கோயில்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. சண்முகாநகர், வ.உ.சி., நகர் பகுதியில் மாநகராட்சி உரக்கூடம் உள்ளது.
இப்பகுதி வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை இங்கு வைத்து மட்கும், மட்காத குப்பை எனப் பிரித்து, உரமாக்கும் பணி மையத்தில் நடக்க வேண்டும். ஆனால் ஒன்றரையாண்டுகளாக இங்குள்ள உரக்கூட உபகரணங்கள் பழுதடைந்து முடங்கியுள்ளது. இதனால் சேகரிக்கப்படும் குப்பை திறந்த வெளியில் மலை போல் குவிக்கப்படுகிறது. பல நாட்களாக கிடப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
கவுன்சிலர் ராதிகா கூறியதாவது: குப்பை சேகரிக்க போதிய வாகனங்கள் இல்லை. இப்பகுதியின் 10 வார்டுகளிலும் சேகரிக்கும் குப்பை இங்கு ஒரே வார்டில் குவிக்கப்படுகிறது. உரக்கூடமும் செயல்படவில்லை. இதுகுறித்து மண்டலக் கூட்டம், மாநகராட்சி அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன். நடவடிக்கை இல்லை. இப்பகுதியில் கோயில், மயானம், குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. உரக்கூடம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

