/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம்.எல்.ஏ.,வை சூழ்ந்த 100 நாள் பணியாளர்கள் ..
/
எம்.எல்.ஏ.,வை சூழ்ந்த 100 நாள் பணியாளர்கள் ..
ADDED : டிச 07, 2024 06:37 AM
சோழவந்தான்: இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தி.மு.க., இளைஞரணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை ஒட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
மாநில துணை அமைப்பாளர் ராஜா தலைமை வகித்தார். வெற்றிச்செல்வன், நல்லதம்பி முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் தியாகமுத்துப்பாண்டி வரவேற்றார். எம்.எல்.ஏ., வெங்கடேசன் வழங்கினார். இவ்விழாவிற்காக 100 நாள் வேலை பணியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பணி நேரத்தில் காத்திருந்தனர்.
விழா முடித்து சென்ற எம்.எல்.ஏ.,வை சூழ்ந்த பெண்கள் சாலையோர தடுப்புச் சுவர் கட்டுமான பணியால் 6 நாட்களாக அரசு பஸ் வரவில்லை.
இதனால் மாணவியர் சிரமப்படுகின்றனர். வெற்றிலை சங்கம் பஸ் ஸ்டாப் மதுக்கடை அருகே மாலை நேரங்களில் மாணவிகளை இறக்கி விடுவதால் அச்சத்துடன் உள்ளோம் என்றனர்.