/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
100லிருந்து 120: மதுரை மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை உயர்கிறது: வெளியானது உத்தேச எல்லை விரிவாக்கம் வரைபடம்
/
100லிருந்து 120: மதுரை மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை உயர்கிறது: வெளியானது உத்தேச எல்லை விரிவாக்கம் வரைபடம்
100லிருந்து 120: மதுரை மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை உயர்கிறது: வெளியானது உத்தேச எல்லை விரிவாக்கம் வரைபடம்
100லிருந்து 120: மதுரை மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை உயர்கிறது: வெளியானது உத்தேச எல்லை விரிவாக்கம் வரைபடம்
ADDED : டிச 31, 2024 04:58 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 ல் இருந்து 120 வார்டுகளாக அதிகரிக்கப்பதற்கான அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் அதற்கான உத்தேச எல்லைகள் விரிவாக்கம் வரைபடம் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மேலும் ஒரு மண்டலம் உருவாகிறது.
மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சி எல்லை விரிவாக்கம் மேற்கொள்ளும் பணிகள் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. இதையடுத்து மாநகராட்சி எல்லையை சுற்றி ஒரு டவுன் பஞ்சாயத்து, 16 கிராம பஞ்சாயத்துகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவானது. இதன் மூலம் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 18 லட்சத்து 72 ஆயிரமாக உயரும்.
இணைக்கப்படும் பகுதிகள்
பரவை (டவுன் பஞ்சாயத்து), கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, செட்டிகுளம், கோவில்பாப்பாகுடி, ஆலாத்துார், பேச்சிகுளம், விரகனுார், நாகமலை புதுக்கோட்டை, கரடிபட்டி, ஏற்குடி அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி (பகுதி), அரும்பனுார் (பகுதி), கொடிக்குளம் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு புதிய உத்தேச மாநகராட்சி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம் 2023 திருத்த சட்டத்தின்படி 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிக்கு 100 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 முதல் 30 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 120 வார்டுகள் உருவாக்கலாம். 30 முதல் 40 லட்சம் மக்கள் தொகைக்கு 140 வார்டுகள் ஏற்படுத்தலாம். மதுரையில் தற்போது 18 லட்சம் மக்கள் தொகை இருக்கலாம் என்ற கணிப்பில் 100ல் இருந்து 120 வார்டுகளாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 5 மண்டலங்களில் இருந்து 6ஆக உயரும். வார்டுகள் வரையறை இனிமேல் முடிவு செய்யப்படும்.
ஒத்தக்கடை பகுதியில் குவாரிகள் அதிகம் உள்ளன. இதுபோல் பல இணைக்கப்படவுள்ள பகுதிகளில் நீர்நிலைகள் அதிகம் உள்ளன. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வார்டுகள் வரையறை செய்யப்படும். இந்த விரிவாக்கத்தில் வடக்கில் அழகர்கோவில் வரையும், மேற்கில் மதுரை காமராஜ் பல்கலை, தென்மேற்கில் கப்பலுார் சிப்காட் வரையும் மாநகராட்சி எல்லைக்குள் கொண்டுவர வேண்டும் என வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர், மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.