sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 'நியோமேக்ஸ்' மோசடி வழக்கில் ஏலம் விடப்படும் 10,000 மனைகள்

/

 'நியோமேக்ஸ்' மோசடி வழக்கில் ஏலம் விடப்படும் 10,000 மனைகள்

 'நியோமேக்ஸ்' மோசடி வழக்கில் ஏலம் விடப்படும் 10,000 மனைகள்

 'நியோமேக்ஸ்' மோசடி வழக்கில் ஏலம் விடப்படும் 10,000 மனைகள்


ADDED : மார் 14, 2026 03:01 AM

Google News

ADDED : மார் 14, 2026 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: முதலீட்டாளர்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, 'நியோ மேக்ஸ்' நிறுவனத்தின், 10,000 மனைகள், ஏலம் விடப்பட்டு, புகார்தாரர்களுக்கு முதலீடு தொகையை திருப்பி தருவதற்கான சட்ட நடவடிக்கை துவங் கப்பட்டுள்ளது.

மதுரையை மையமாக வைத்து இயங்கிய நியோமேக்ஸ் பிராபர்டிஸ் பிரைவேட் லிட்., என்ற மோசடி நிறுவனம், மக்களிடம் அதிக முதலீடு பெற்று, கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியது. மோசடி பணத்தில் மனைகளை வாங்கி குவித்தது. முதிர்வு தொகை முடிந்தும், பணம் தரப்படாததால், பாதிக்கப்பட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, நிர்வாக இயக்குநர்கள் உட்பட பலரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே, நீதிமன்ற கண்காணிப்பில் நியோமேக்ஸ் பிராபர்டிஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளில் அங்கீகாரம் பெற்ற மனையிடங்களுக்கு www.mstcecommerce.com ல் மின்னணு ஏலம் நடக்க உள்ளது.

ஏலம் விடப்படும் சொத்துகளின் விபரங்கள், முன்பண வைப்புத்தொகை, ஏல வழிகாட்டுதல்கள் குறித்த விபரங்களை, இந்த இணையதளத்தில் அறியலாம்.

ஏலம் விடப்படும் மேற்படி நிறுவனத்தின், 10,000 மனைகள் பற்றிய விபரம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு www.tneow.tn.gov.in என்ற இணையதளத்தில் அறி யலாம். மின்னணு ஏலங்கள், வரும் 17 முதல், மே 17 வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us