/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கோயிலில் 1008 விளக்கு பூஜை
/
குன்றத்து கோயிலில் 1008 விளக்கு பூஜை
ADDED : ஆக 16, 2025 12:53 AM

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உலக நன்மை வேண்டியும், பெண்களுக்கு வரன் அமைய, உலக உயிரினங்கள் சுபிட்சம் பெற, மழை வேண்டியும் 1008 விளக்கு பூஜை நடந்தது.
கோயில் சார்பில் திருவாட்சி மண்டபத்தில் 3 அடி வெள்ளி விளக்கு, கம்பத்தடி மண்டபம், உற்ஸவர் சன்னதி, மடப்பள்ளி மண்டபம், ஆஸ்தான மண்டபங்களில் 3 அடி பித்தளை விளக்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டன.
பிரதான விளக்கில் சிவாச்சாரியார்கள் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து கோயில் அனைத்து மண்டபங்களிலும் இருந்த பெண் பக்தர்கள் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். தீபாராதனைக்கு பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், துணை கமிஷனர் சூரிய நாராயணன் பங்கேற்றனர்.