/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் பழனிசாமி 4 நாள் பிரசாரம் பாதுகாப்பு கேட்டு '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு
/
மதுரையில் பழனிசாமி 4 நாள் பிரசாரம் பாதுகாப்பு கேட்டு '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு
மதுரையில் பழனிசாமி 4 நாள் பிரசாரம் பாதுகாப்பு கேட்டு '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு
மதுரையில் பழனிசாமி 4 நாள் பிரசாரம் பாதுகாப்பு கேட்டு '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு
ADDED : ஆக 31, 2025 06:54 AM
மதுரை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசார கூட்டத்தின் போது வந்த ஆம்புலன்ஸ், அதன் டிரைவர் தாக்கப்பட்டதால், மதுரையில் நான்கு நாட்கள் பழனிசாமி பிரசாரத்தின் போது, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.
வேலுார், திருச்சி மாவட்டங்களில் நடந்த பிரசார பயணத்தில் பழனிசாமி பேசும் போது, ஆம்புலன்ஸ்கள் சென்றதால் அதை வழிமறித்து கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 'இனியொரு முறை ஆம்புலன்ஸ் வந்தால், அந்த ஓட்டுநரே நோயாளியாக ஆம்புலன்ஸில் செல்ல நேரிடும்' என, பழனிசாமியும் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், செப்., 1 முதல், 4 வரை மதுரையில், புதுார், திருப்பரங்குன்றம், ரிங்ரோடு மற்றும் உசிலம்பட்டியில் பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்த ரோடுகளில் நின்று அவர் பேசும்போது ஆம்புலன்ஸ் சென்றால், பழனிசாமி, கட்சியினரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் மனு அளித்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலர் இருளாண்டி கூறியதாவது:
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என பி ரசாரம் செய்யும் பழனிசாமிக்கு, '108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மக்களாக தெரியவில்லையா? இதுவரை, 23 மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் பழனிசாமி மீது புகார் மனு கொடுத்துள்ளோம். பாதுகாப்பு வேண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆக., 25ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'வரும் காலங்களில், ரோடுகளில் அவர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது' என, அரசை வலியுறுத்தியுள்ளோம்.
மதுரையில் செப்., 1 முதல், 4 வரை மதுரை புதுார், ஒத்தக்கடை, பழங்காநத்தம், மைனா தெப்பக்குளம், காமராஜர் ரோடு, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் பழனிசாமி சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். அவர் ரோட்டில் கூட்டம் நடத்தும் இடங்களில் ஆம்புலன்ஸ் செல்லும் போது, போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.