sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 முழு சம்பளம் தராவிட்டால் வருகைப்பதிவேடு புறக்கணிப்பு; 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முடிவு

/

 முழு சம்பளம் தராவிட்டால் வருகைப்பதிவேடு புறக்கணிப்பு; 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முடிவு

 முழு சம்பளம் தராவிட்டால் வருகைப்பதிவேடு புறக்கணிப்பு; 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முடிவு

 முழு சம்பளம் தராவிட்டால் வருகைப்பதிவேடு புறக்கணிப்பு; 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முடிவு


ADDED : ஜன 20, 2026 08:03 AM

Google News

ADDED : ஜன 20, 2026 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது.

மாநில தலைவர் உலகநாதன், பொதுச் செயலாளர் இருளாண்டி, பொருளாளர் கணேசன் கூறியதாவது:

இதுவரை எங்களுக்காக ஒரு அறிவிப்பை கூட முதல்வர் ஸ்டாலின் வெளியிடாதது வருத்தமாக உள்ளது. ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் ஆண்டு ஊதிய உயர்வை 2025ல் 16 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்து ஆம்புலன்ஸ் நிர்வாகம் வழங்கியுள்ளது. எங்களுக்கு இதுவரை ஊதிய உயர்வை அதிகரிக்கவில்லை.

ஒவ்வொரு தொழிலாளரும் ஆண்டுக்கு எவ்வளவு விடுமுறை எடுக்கவில்லை என்பதை மாதச்சம்பள ரசீதில் வரவு வைக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நடைமுறையை மாற்றி எங்களுக்கு தரப்பட்ட இ.எல்., பி.எல்., விடுமுறைகளைக்கூட சுரண்டுகிறது நிர்வாகம். மீண்டும் சம்பள ரசீதில் விடுமுறை விவரங்களை வெளியிட வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று தவணைகளாக மாதஊதியம் வழங்கப்படுவதை ஏற்க முடியாது. பிப்ரவரியில் முழு சம்பளம் வழங்காவிட்டால் வருகைப்பதிவேட்டு முறையை புறக்கணிப்போம். மதுரை, கோவை, சென்னையில் உண்ணாவிரதம் இருக்கவும், முதல்வர் வீடுநோக்கி நடைபயணம் மேற்கொள்வதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றனர்.






      Dinamalar
      Follow us