தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளர் போராட்டம் ஒத்திவைப்பு

‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளர் போராட்டம் ஒத்திவைப்பு

‘108’ ஆம்புலன்ஸ் தொழிலாளர் போராட்டம் ஒத்திவைப்பு


UPDATED : நவ 06, 2026 07:12 PM

ADDED : நவ 05, 2026 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:12 PM ADDED : நவ 05, 2026 06:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சென்னையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இருளாண்டி தெரிவித்தார். அவர் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.9200 ஐ ஊக்கத்தொகையாக வழங்காமல் சட்டப்படியான போனஸாக வழங்க வேண்டும். 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைப்பது என்ற கோரிக்கையை நீதிமன்றம் மூலம் தீர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மருத்துவக் காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்துவது குறித்து முடிவு தெரிவிப்பதாக ஆம்புலன்ஸ் நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்பதால் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படவில்லை. இதனால் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிமாக ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us