UPDATED : நவ 06, 2026 07:12 PM
ADDED : நவ 05, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
அலங்காநல்லூர்: ‘‘கல்லணை ஊராட்சி புதுப்பட்டி மயானத்தை பராமரிக்க வேண்டும்’’ என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு அலங்காநல்லுார், தனிச்சியம் மெயின் ரோடு அருகே மயானம் அமைந்துள்ளது. பாதையே தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் அடர்ந்து புதராக மாறியுள்ளது. பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடுவதால் அருகில் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
இறுதிச் சடங்குகள் செய்வதற்காக பயன்படும் குளியல்தொட்டி பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
