/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ செல்லும் '108' ஆம்புலன்ஸ்கள்
/
இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ செல்லும் '108' ஆம்புலன்ஸ்கள்
இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ செல்லும் '108' ஆம்புலன்ஸ்கள்
இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ செல்லும் '108' ஆம்புலன்ஸ்கள்
ADDED : ஏப் 26, 2025 04:31 AM
மதுரை : நிறுத்த வேண்டிய இடத்தை வெவ்வேறு இடங்களில் '108' ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படுவதால் பிரசவம், விபத்து அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உடனடியாக எடுக்க முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது என்கின்றனர் '108' ஆம்புலன்ஸ் சங்கத்தினர்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் குறிப்பிட்ட கி.மீ., இடைவெளியில் 43 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்காணித்து புள்ளிவிவரங்கள் சேகரித்த பிறகே அந்த பகுதியில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
ஆனால் இடத்தை இஷ்டம்போல அதிகாரிகள் மாற்றுவதால் மக்கள் சேவை பாதிக்கப்படுவதாக '108' ஆம்புலன்ஸ் சங்க மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஓராண்டுக்கு முன் கலைஞர் நுாலகத்தில் ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். நுாலகத்தில் பெண் தொழில்நுட்ப உதவியாளர் (இ.எம்.டி.,) தங்குவதற்கு இடமில்லை. அறையும் ஒதுக்கவில்லை.
அந்த வண்டியை மதுரை அரசு மருத்துமவனை மார்ச்சுவரி அருகில் நிறுத்தியுள்ளனர். நத்தம் பறக்கும் பாலத்தில் நிறைய விபத்து நடக்கிறது. ஆனால் ரிசர்வ்லைன் முதல் நத்தம் ரோடு வரை ஆம்புலன்ஸ்கள் இல்லை.
விபத்து, அவசரம் என்றால் மார்ச்சுவரியில் இருந்து வண்டியை எடுக்கிறோம். நுாலகத்தில் இடமில்லாவிட்டால் ரிசர்வ்லைன் ஆரம்ப சுகாதார நிலையத்தில்(பி.எச்.சி.,) நிறுத்த வேண்டும்.
சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே நின்ற வண்டியை சரந்தாங்கி ஊருக்குள் நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சமீபத்தில் தான் பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புது வண்டி நிறுத்தப்பட்டுள்ளது.
சரந்தாங்கிக்கும் பாலமேட்டுக்கும் இடையே 4 கி.மீ., துாரத்தில் இரண்டு வண்டிகள் உள்ளன. ஒரு வண்டியை சத்திரப்பட்டி அல்லது காஞ்சரம்பேட்டை பி.எச்.சி.,யில் நிறுத்தலாம். தற்போது புதுார் அல்லது கள்ளந்திரியில் இருந்து தான் அவசரத்திற்கு வாகனங்கள் செல்கின்றன.
பிரசவம் பார்க்க முடியவில்லை
அவனியாபுரத்தில் சிறிய ஆம்புலன்ஸ் உள்ளதால் கர்ப்பிணிகளை ஏற்றுவதும் கூடவே ஒருவரை அமர்த்துவதும் சிரமமாக உள்ளது. அவசரத்திற்கு பிரசவம் பார்க்கவும் முடியவில்லை. இந்த வண்டியை விழாக்கள், போட்டி நடக்கும் இடங்களுக்கு மாற்றி விட்டு பெரிய ஆம்புலன்ஸ் இயக்கவேண்டும்.
மாவட்டத்திற்கு இரண்டு வண்டிகள் 'ஸ்பேர்' ஆக உள்ளதால் பெரிய வண்டியை மாற்ற வேண்டும். வண்டி நிறுத்த இடமில்லை, மருந்துகள் வைக்க அறையில்லை என்ற காரணத்திற்காக அதிகாரிகள் இடமாற்றம் செய்கின்றனர். ஆனால் நோயாளிகளின் தேவையை கருத்தில் கொள்ளவில்லை.
சும்மா கிடக்கும்கான்வாய் வண்டிகள்
வி.ஐ.பி.,க்களுக்கான கான்வாய் வண்டிகள் பயன்படுத்தாமல் அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைத்து ரெகுலர் வண்டிகளை பயன்படுத்துகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மாறி மாறி அடுத்த ஏரியா ஆம்புலன்ஸ் வண்டிகளை இயக்க வேண்டும்.
ஒரே பகுதியில் உள்ள வண்டிகளை இயக்குவதால் விபத்துகளுக்கு நீண்ட துாரம் கடந்து வரவேண்டியுள்ளது. சில இடங்களில் ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர், உதவியாளர்களை அனுப்பி மற்றொரு வண்டியை நிறுத்துகின்றனர். இந்த பிரச்னையை கலெக்டரிடம் கோரிக்கை மனுவாக வழங்கியுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.

