ADDED : பிப் 01, 2026 06:23 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மேலுார் சட்டசபை தொகுதிக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஆர்.டி.ஓ., சங்கீதா போட்டியை துவக்கி வைத்தனர். காளைகள், வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்ட னர். மேலுார் தொகுதிக் குட்பட்ட 1194 காளைகள், 580 வீரர்கள் களமாடினர்.
காயமடைந்த 59ல் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். வெற்றி பெற்ற காளைக்கும், வீரருக்கும் சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த மைதானத்தில் பிப்.,2ல் சோழவந்தான், பிப்.,5ல் உசிலம்பட்டி, 9ல் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி களுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.

