நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் இந்திய கலை பண்பாட்டு மரபுரிமை தேசிய அறக்கட்டளை சார்பில் 'மரங்களின் மகத்துவம்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடந்தது.
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வாணி ஏற்பாடு செய்திருந்தார். முதல்வர் ஈஸ்டர் ஜோதி வரவேற்றார். சுற்றுச்சூழல் ஆர்வலர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மதுரை இளம் இந்தியா அறக்கட்டளை காலநிலை மாற்றத்தின் சீரமைப் பாளர் மதுமிதா மரங்களை காப்பது நமது கடமை என்பது குறித்து பேசினார். மாணவர்களுக்கு சான் றிதழ், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

