தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முற்றுகை போராட்டம் நாளை நடத்த திட்டம்

 முற்றுகை போராட்டம் நாளை நடத்த திட்டம்

 முற்றுகை போராட்டம் நாளை நடத்த திட்டம்


ADDED : பிப் 01, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வா தார இயக்க அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி (நாளை) பிப். 2ல் சென்னை தலைமை அலுவலகம் முன்பாக காலவரையற்ற முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

அவர்கள் கூறிய தாவது:

பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்புடன் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். அடிப்படை ஊதிய உயர்வுடன் பி.எப்., பிடித்தம், காப்பீட்டுத் திட்டம் வழங்கவேண்டும். பணியின் போது உயிர் இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

பெண் பணியாளர் களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும். சமுதாய சுயஉதவிக் குழு பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு செயல்படுத்த வேண்டுமென மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் முதன்மை செயலரிடம் மனு கொடுத்தும் நட வடிக்கை எடுக்கவல்லை.

மாநில அலுவலகத்தில் இருந்து எங்கள் கோரிக்கை களுக்கு சரியான பதில் கிடைக்காததால் பிப்.,2ல் சென்னை தலைமை அலுவலகம் முன்பாக கால வரையற்ற முற்றுகை தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us